வி.சி.க எம்.பி ரவிக்குமார் திருக்குறள் மூலம் ஆ.ராசாவுக்கு மறைமுகமாக அறிவுரை
தி.மு.க கூட்டணியில் 2 இடங்களை வெற்றி பெற்ற வி.சி.க, ஐ.யூ.எம்.எல் கட்சிகள் த.வெ.க-வுக்கு ஆதரவு அளித்து அமைச்சரவையில் இடம்பெற்ற நிலையில், தி.மு.க எம்.பி ஆ.ராசா கடுமையான வார்த்தைகளைக் குறிப்பிட்டு விமர்சனம் செய்தார். இதற்கு வி.சி.க தரப்பில் சமூக வலைதளங்களில் கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வி.சி.க எம்.பி ரவிக்குமார் எக்ஸ் தளத்தில், “இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோவன்சொல் வழங்கு வது.” என்ற திருக்குறளை பதிவிட்டு ஆ.ராசாவுக்கு மறைமுகமாக அறிவுரை கூறியுள்ளார். இந்த குறளின் பொருள்: “அன்பாகப் பேசுவதால் கிடைக்கும் நன்மைகளையும், அதனால் பிறர் அடையும் மகிழ்ச்சியையும் ஒருவன் தன் அனுபவத்தில் கண்டுகொண்டால், அவன் தன் வாழ்நாளில் ஒருபோதும் பிறர் மனம் வருந்தும்படியான கடுமையான சொற்களைப் பேசவே மாட்டான்.” என்பதாகும்.





