மக்கள் சேவையே முதன்மை, எங்கு இருந்தாலும் என் கதவுகள் திறந்தே இருக்கும் – தவெக எம்எல்ஏ கனிமொழி
அலுவலக பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை தனது பழைய ஜோதிட அலுவலகத்திலேயே அதிகாரிகளையும், தன்னைச் சந்திக்க விரும்பும் பொதுமக்களையும் சந்தித்து அவர்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்து வருவதாகவும், மக்கள் சேவையே தனது முதன்மை நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.
அலுவலகம் எந்த இடத்தில் இருந்தாலும் மக்களின் நலனுக்காக தனது கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். அரசு அதிகாரிகளை வீட்டிற்கு அழைத்து ஆலோசனை நடத்தியதாக எழுந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில், தவெக எம்எல்ஏ கனிமொழி இந்த விளக்கத்தை தெரிவித்துள்ளார்.





