தேர்தல் அதிகாரிகளுக்கு நாளை பயிற்சி..!
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளையும் சேர்ந்த தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் உதவி அதிகாரிகளுக்கான சிறப்புப் பயிற்சி முகாம் சென்னையில் நாளை நடைபெற உள்ளது. சென்னை கலைவாணர் அரங்கில் தேர்தல் ஆணையம் சார்பில் நடத்தப்படும் இந்தப் பயிற்சியில், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படவுள்ளன.
கூடுதல் தேர்தல் அதிகாரி சிவஞானம் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், தேர்தல் ஆணையத்தின் விதிகளை முறையாகப் பின்பற்றுவது மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவான பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. இதில் பயிற்சி பெறும் தலைமை அதிகாரிகள், பின்னர் அந்தந்த மாவட்டங்களுக்குச் சென்று அங்குள்ள தேர்தல் பணியாளர்களுக்குப் பயிற்சிகளை வழங்க உள்ளனர்.





