--- --:--:-- --

கிராமம் கிராமமாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் அமைச்சர் சாமிநாதன்!

saminathan

அமைச்சர் சாமிநாதனுக்கு உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்.

காங்கேயம்: காங்கேயம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரும், அமைச்சருமான எம்.எஸ். சாமிநாதன், தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பொத்தியபாளையம் மற்றும் பாப்பினி ஊராட்சிப் பகுதிகளில் அவர் பொதுமக்களை நேரில் சந்தித்து ‘உதயசூரியன்’ சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.

 

 

காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பொத்தியபாளையம் ஊராட்சியில் உள்ள பல்வேறு குடியிருப்புகளில் அமைச்சர் சாமிநாதன் இன்று வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். குறிப்பாக இல்லியம்புதூர் குடியிருப்பு, கவுண்டம்பாளையம் , கல்லாங்காட்டுபுதூர், பொத்தியபாளையம், ஜெ. நகர், வட்டமலை, வேலப்பநாயக்கன்வலசு உள்ளிட்ட பகுதிகளில் அவர் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். செல்லும் இடமெல்லாம் பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

 

காங்கேயம் தொகுதியில் இரவில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அமைச்சர் சாமிநாதன்

 

தொடர்ந்து பாப்பினி ஊராட்சியில் உள்ள புகழ்பெற்ற பாப்பினி அம்மன் கோயிலுக்குச் சென்று அமைச்சர் சாமிநாதன் தரிசனம் செய்தார். பின்னர் கோயில் வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கூடியிருந்த பொதுமக்களிடையே உரையாற்றிய அவர், கடந்த காலங்களில் தொகுதிக்குச் செய்த நலத்திட்டங்களையும், வரவிருக்கும் புதிய திட்டங்களையும் பட்டியலிட்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டார்.

 

 

பிரச்சாரத்தின் போது முதியவர்களிடமும், இளைஞர்களிடமும் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர், திமுக அரசின் சாதனை விளக்கத் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தார். இந்தப் பிரச்சாரத்தின் போது திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர். காங்கேயம் தொகுதியில் அமைச்சரின் இந்தத் தீவிரப் பிரச்சாரம் தேர்தல் களத்தைச் சூடாக்கியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon