--- --:--:-- --

ஜனநாயகன் விவகாரம் எச்சரிக்கை: குற்றவாளி சங்கத்தினர் என்றால் சினிமாவில் இடமில்லை – ஆர்.கே. செல்வமணி

5

னநாயகன் திரைப்பட விவகாரம் எங்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத் தலைவர் ஆர்.கே. செல்வமணி தெரிவித்துள்ளார். சினிமா துறை முழுமையாக டிஜிட்டல் முறைக்கு மாறியுள்ள நிலையில், ஒரு படத்தின் காப்பி ஒரே ஒருவரிடம் மட்டுமே இருப்பது இல்லை என்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறினார்.

 

 

இந்த விவகாரத்தில் காவல் துறையினர் குற்றவாளிகளை நெருங்கிவிட்டதாகவும், விரைவில் உண்மை வெளிச்சத்துக்கு வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், இந்த தவறில் ஈடுபட்டவர் எங்கள் சங்கத்தைச் சேர்ந்தவராக இருந்தால், அவர் இனி சினிமா துறையில் தொடர்ந்து செயல்பட முடியாத வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆர்.கே. செல்வமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon