--- --:--:-- --

சென்னை-அரக்கோணம் பிரிவில் ஏசி புறநகர் ரயில் சோதனை ஓட்டம்..!

4

தெற்கு ரயில்வே சார்பில் ஆவடி ரயில் பணிமனை மற்றும் அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு இடையே ஏசி ரயிலின் சோதனை ஓட்டத்தை நடத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்த கோடையில் சென்னை – அரக்கோணம் புறநகர் ரயில் பிரிவில் முதல் முறையாக குளிரூட்டப்பட்ட (AC) பெட்டி சேவைகள் தொடங்கப்பட உள்ளன.

 

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே கடந்த ஏப்ரல் 2025-இல் தொடங்கப்பட்ட குளிரூட்டப்பட்ட புறநகர் ரயில் சேவையின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது சென்னை – அரக்கோணம் ரயிலில் ஏ.சி. பெட்டிகள் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “முதலில் சென்னை – அரக்கோணம் பிரிவில் ஏசி ரயில் சேவைகள் கோடை காலத்திற்கு முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் தொடங்க திட்டமிடப்பட்டது. சில தாமதங்கள் காரணமாக, இந்த சேவைகள் விரைவில் தொடங்கும் என்று கூறியுள்ளார். மேலும் இந்தப் பிரிவில் குளிரூட்டப்பட்ட ரயில் சேவைகளுக்கான சோதனை ஓட்டம் நடத்தப்படுவது இதுவே முதல் முறை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு பிரிவில் ஏசி ரயில்கள் தொடங்கப்பட்ட பிறகு, வியாபாரிகள், அலுவலகம் செல்வோர் மற்றும் முதியவர்கள் உள்ளிட்ட உள்ளூர் பயணிகள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்தச் சேவை தொடங்கப்படுகிறது. சாதாரண புறநகர் ரயில்கள் இந்த தூரத்தைக் கடக்க 3 மணிநேரம் எடுத்துக் கொள்ளும் நிலையில், அரக்கோணம் ‘ஃபாஸ்ட் லோக்கல்’ (Fast Local) ரயில் 2 மணி நேரத்தில் இலக்கை சென்றடையும்.

 

அதிகப்படியான பயணிகள் குறுகிய காலத்தில் சென்னைக்குச் செல்ல ரயிலையே நம்பியிருப்பதால், இந்தப் புதிய ஏசி ரயில் சேவைக்கு நல்ல வரவேற்பு இருக்கும்,” என அரக்கோணம் அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.

 

குறிப்பாக நெரிசல் நேரங்களில், 12 பெட்டிகள் கொண்ட குளிர்சாதன வசதியுடனான புறநகர் ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஏசி ரயில் பேசின் பிரிட்ஜ், பெரம்பூர், அம்பத்தூர், ஆவடி, திருவள்ளூர் மற்றும் அரக்கோணம் போன்ற முக்கிய ரயில் நிலையங்களில் குறைந்த நிறுத்தங்களைக் கொண்ட சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் விரைவு ரயில் வழித்தடத்தில் இது இயங்கும்.

 

குளிரூட்டப்பட்ட ரயில் சேவைகளின் குறைந்தபட்ச வேகம் மணிக்கு 90 கி.மீ ஆக இருக்கும். இது பாதையில் அதிகபட்ச வேகம் மணிக்கு 110 கி.மீ ஆக அதிகரிக்கப்படும். சோதனை ஓட்டத்தில் பாதையின் நிலைத்தன்மை, சிக்னல் ஒருங்கிணைப்பு மற்றும் வேக வரம்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் பாதை இயக்கத்தை சரிபார்ப்பதும் அடங்கும்.

 

தற்போது, அரக்கோணம் ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு மற்றும் புறநகர் ரயில்களும் இரண்டு தண்டவாளங்களில் மட்டுமே இயக்கப்படுகின்றன. தினமும் 120-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் இந்த நிலையத்தைக் கடந்து செல்கின்றன. வருங்காலத்தில் கூடுதல் விரைவு ரயில்களை இயக்குவதற்காக, தற்போதுள்ள தண்டவாளங்களுக்கு அருகில் குறைந்தது இரண்டு புதிய தண்டவாளங்களை அமைக்க 9 மீட்டர் கூடுதல் இடத்தை தெற்கு ரயில்வே சமீபத்தில் உருவாக்கியுள்ளது.

 

Right Menu Icon