--- --:--:-- --

சிகிச்சை பலனின்றி கைதி உயிரிழப்பு – போலீசார் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு

3

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ரயில்வே காலனியில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நள்ளிரவில் ஜீவா நகரை சேர்ந்த ஜெயக்குமார், ஆதனூரைச் சேர்ந்த அழகர் ஆகியோரை பட்டாகத்தி மற்றும் அறிவாளால் இருவர் தாக்கினர்.

 

இந்த சம்பவத்தில் ஆகாஷ் டெலிசன் என்ற 24 வயது இளைஞனை மானாமதுரை போலீசார் பிடிக்க முயன்ற போது மேலபசலை மேம்பாலத்தில் இருந்து அந்த இளைஞன் கீழே குதித்து தப்ப முயன்றதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

 

அப்போது அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டு மானாமதுரை அரசு மருத்துவமனை மற்றும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஆகாஷ் டெலிஷனுக்கு நள்ளிரவில் திடீரென மூச்சு தினறல் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

 

ஆனால், மானாமதுரை போலீசார் ஆகாஷ் டெலிஷனை விசாரணையின் போது அடித்து துன்புறுத்தியதால் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கைதி உயிரிழந்த சம்பவம் மானாமதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Right Menu Icon