--- --:--:-- --

தொடர் சரிவில் தங்கம் விலை..!

2

னவரி மாதத்தில் தங்கம் விலை புதிய புதிய உச்சத்தை தொட்டு வந்த நிலையில், பிப்ரவரி மாத நடுவில் இருந்து தங்கம் விலை கணிசமாக குறைந்து வருகிறது.

கடந்த 2 – 3 நாட்களாகவே தங்கம் விலை இறங்கு முகத்தில் இருப்பதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர். நேற்று முன் தினம் கிராமுக்கு ரூ.120 குறைந்த நிலையில், தொடர்ந்து நேற்றும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 குறைந்தது.

நேற்றைய ( பிப்ரவரி 17) நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 குறைந்து ரூ.14,320க்கும், சவரனுக்கு ரூ.960 குறைந்து ரூ.1,14,560க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து இன்றும் ( பிப்ரவரி 18) தங்கம் விலை கணிசமாக குறைந்து நகை பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதன் படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 குறைந்து ஒரு கிராம் ரூ.14,320க்கும் சவரனுக்கு ரூ. 720 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல, 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.12,180க்கும் சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.97,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.260க்கும், ஒரு கிலோ ரூ.2,60,000க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

Right Menu Icon