பீரில் விஷம் கலந்து இளைஞர் கொலை
பீரில் விஷம் கலந்து கொடுத்து வேலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞரை கொலை செய்து உடலை ஆவணத்தில் வீசி சென்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் நாகலூர் வனத்துக்குள் ஆணுடல் ஒன்று கிடந்தது அழுகிய நிலையில் அதே கிடந்ததால் உடல் யாருடையது அந்த நபர் உயிரிழந்தது எப்படி என்பதை கண்டறிய வேண்டிய பொறுப்பு காவல்துறையினரிடம் வந்தது.
அவர்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது உடலுக்கு அருகே கிடந்த செல்போன் தான். அதனை வைத்து நடத்தப்பட்ட விசாரணையில் உண்மை வெளிவந்தது. உயிரிழந்து கிடந்த அவர் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள நெஞ்சறி எனும் இடத்தைச் சேர்ந்த சத்யராஜ் கடந்த 10 ஆண்டுகளாக பெங்களூருவைச் சேர்ந்த கட்டட கான்ட்ராக்டர் என்பவரிடம் பணியாற்றி வந்தார்.
கனகராஜன் மனைவி மீனாவுக்கும் சத்யராஜ் அவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக தெரிகிறது. மூன்று பேரும் சேர்ந்து செப்டம்பர் 29ஆம் தேதி சத்யராஜை கார் மூலம் கடத்தி பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக ஆந்திர மாநிலத்தில் உள்ள வனத்திற்கு கொண்டு சென்றதாக தெரிகிறது. அங்கு பீரில் விஷத்தை கலந்து கொடுத்து சத்யராஜை கொலை செய்ததாக காவல்துறை தரப்பில் செல்லப்படுகிறது. உடலை அங்கேயே வீசிவிட்டு தப்பிச் சென்ற மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




