9 ஆண்டுகளாக பட்டாசு இல்லாத தீபாவளியை கொண்டாடும் கிராம மக்கள்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இயற்கையை பாதுகாக்கும் விதமாக 9 ஆண்டுகளாக பட்டாசு இல்லாத தீபாவளியை கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர். பல்லடம் அருகே உள்ள ஆரைக்குளம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

 

இப்பகுதியில் மைனா கொக்கு மயில் நாரை குயில் உள்ளிட்ட பறவைகளும் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்த நிலையில் பறவைகள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக கடந்த ஒன்பது வருடங்களுக்கு முன்பு பட்டாசு இல்லாத தீபாவளியை கொண்டாட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

 

இதனை தொடர்ந்து கிராம மக்கள் ஆண்டு தோறும் தீபாவளியை முன்னிட்டு பட்டாசுகளை வெடிப்பது இல்லை இதனால் சுற்றுச்சூழல் மாசு அடையாமல் உள்ளதாக கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதை போன்ற சில தீபாவளியை கொண்டாட மக்கள் முன்வர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.


Leave a Reply