உலகத் தமிழர்களுக்காக ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டம் – அயலகத் தமிழர் தின விழாவில் ஸ்டாலின் பேச்சு
அயலகத் தமிழர் தின விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மாபெரும் கனவுகளை கொண்டது நம் தமிழ் இனம்! அந்த கனவுகளை அடைய வேண்டும் என்றுதான் நாடு போற்றும் திட்டங்களை செயல்படுத்தி, வரலாறு காணாத வளர்ச்சியை அடைந்து வருகிறோம்.
இந்த வளர்ச்சி என்பது நம் அடுத்த பாய்ச்சலுக்கான அடித்தளம். அதற்காகதான், ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தை உருவாக்கியிருக்கிறோம். அதில் அயலகத் தமிழர்களும் தங்களது கனவுகளை சொல்லலாம்.” என்று கூறினார்.





