தூய்மைப் பணியாளர்கள் உண்ணாவிரதம் முடித்துவைப்பு
அம்பத்தூரில் உண்ணாவிரதம் இருந்து வந்த சென்னை மாநகராட்சியின் 5வது மற்றும் 6வது மண்டல தூய்மைப் பணியாளர்களை அமைச்சர் சேகர் பாபு மற்றும் மேயர் பிரியா நேரில் சந்தித்துப் பேசினர்.
பழச்சாறு கொடுத்து பெண் தூய்மைப் பணியாளரின் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார் அமைச்சர் சேகர் பாபு. தனியார்மயமாக்கலை எதிர்த்து 150 நாட்களுக்கும் மேலாகப் போராடி வந்த தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் தீர்வை எட்டியது.





