நடிகர் தனுஷ் யாருடைய மகன்? மதுரை தம்பதி தொடுத்த வழக்கு ஒத்திவைப்பு
நடிகர் தனுஷ் தங்கள் மகன் என உரிமை கோரி மதுரை தம்பதி தொடுத்த வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது.
நடிகர் தனுஷ் தங்களின் மூத்த மகன் என உரிமை கோரி மதுரை மேலூரைச் சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதியினர் மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி தனுஷ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை ஏற்று மேலூர் நீதிமன்றத்தில் கதிரேசன்-தம்பதி தாக்கல் செய்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து மதுரை தம்பதியினர், உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்தனர்.தனுஷ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழ் போலியானது என கூறி தாங்கள் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்ததாக மனுவில் தம்பதியினர் குறிப்பிட்டிருந்தனர்.
மேலும் இவ்வழக்கை கேரளா அல்லது கர்நாடக மாநிலங்களுக்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது நான்கு வார காலத்திற்கு விசாரணையை ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




