மலைப்பாதையில் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மலைப் பாதையில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.இந்த விபத்தில், பேருந்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கடுமையான மேகமூட்டமும் நிலவி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் மதுரையிலிருந்து உதகை நோக்கி சென்ற அரசுப் பேருந்து ஒன்று மேட்டுப்பாளையம் அருகே மலைப்பாதையில் 30 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. நல்ல வேளையாக பேருந்தில் இருந்த பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். மேகமூட்டம் அதிகம் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




