குடிபோதையில் இரு சக்கர வாகனம் ஓட்டிய காவலரை மடக்கிய பொது மக்கள்
திருப்பூர் அருகே குடிபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த காவலரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
திருப்பூர் அருகிலுள்ள பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிபவர் மயில்சாமி . நேற்று மாலை தனது இருசக்கர வாகனத்தில் அவினாசி அருகே சென்று கொண்டிருந்த அவர் சாலையில் நடந்து சென்ற பெண்ணின் மீது மோதிவிட்டு நிறுத்தாமல் சென்றுள்ளார். இதை பார்த்த பொதுமக்கள் சிறிது தூரம் துரத்திச் சென்று அவரை மடக்கினர். அப்போது அவர் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்த பொதுமக்கள் காவலர் மயில்சாமியை போலீசாரிடம் ஒப்படைத்தனர். காவலர் ஒருவரே குடிபோதையில் வாகனம் ஓட்டிச் சென்ற சம்பவம் பொதுமக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது .
📱 Share on WhatsApp 𝕏 Share on X




