--- --:--:-- --

மரக்கன்று நடும் மாணாக்கருக்கு மதிப்பெண் வழங்குவது வரவேற்கத்தக்கது

2index

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் 88வது பிறந்த நாளையொட்டி சென்னை எம்ஜிஆர் நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மரக்கன்று நடும் விழாவில் நடிகர் விவேக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் பேசிய அவர் மாணவர்கள் எங்கு சென்றாலும் தாய்மொழி தாய் பள்ளி மற்றும் ஆசிரியர்களை மதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

 

அதன்பின் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய விவேக் இன்றைய இளைஞர்கள் டுவிட்டர் போராளிகளாக மட்டுமே இருக்கிறார்கள் என்று கூறுவது தவறு என்றும் அவர்கள் களத்திற்கு வந்து எழுச்சியுடன் போராடுவதே உண்மை என்றும் கூறினார். தனியார் பள்ளி மாணவர்களும் அவர்கள் மரம் நட்டால் அவர்களுக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என்று விவேக் கோரிக்கை வைத்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon