--- --:--:-- --

இந்திய வம்சாவளி 3 பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

Capture

இந்திய தம்பதி உட்பட 3 பேருக்கு இந்த ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 51 ஆவது ஆண்டாக பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. 1969ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இதுவரை பெற்றனர். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு கொல்கத்தாவில் பிறந்து அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற அபிஜித் பானர்ஜி அவருடைய மனைவி எஸ்தர் மற்றும் மைக்கேல் ஆகிய மூன்று பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

 

சர்வதேச அளவில் வறுமையை ஒழிப்பதற்கான திட்டங்களை வகுத்து காகவும் அணுகுமுறைகளும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது 1961 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்த அபிஜித் பானர்ஜி அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் மற்றும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பயின்றவர். தற்போது இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் பொருளாதார பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவியான எஸ்தர் பிரான்சில் 1972ஆம் ஆண்டு பிறந்தவர் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெறும் இரண்டாவது பெண் மற்றும் இளம் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவரும் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜியில் வறுமை ஒழிப்பு மற்றும் மேம்பாட்டு பொருளாதார பேராசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும் அமெரிக்காவில் பிறந்த மைக்கேல் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணி செய்து வருகிறார். முன்னதாக கடந்த 1998ஆம் ஆண்டு இந்தியாவை சேர்ந்த அமர்த்தியா சென் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசினைப் பெற்றார். இதுவரை ஐந்து தம்பதிகள் ஒரே துறையில் கணவன் மனைவி நோபல் பரிசை பெற்றுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon