பேருந்தை முந்த முயன்ற இரு சக்கர வாகன ஓட்டி பலி!

சென்னை வடபழனியில் மாநகர பேருந்தை இருசக்கர வாகனத்தில் முந்த முயற்சி செய்தபோது வியாபாரி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இன்று மதியம் கேகே நகரில் இருந்த சுய தொழில் செய்து வரும் வியாபாரி மகேந்திரன் என்பவர் கோயம்பேட்டிலிருந்து வடபழனி நோக்கி வந்து கொண்டு இருக்கிறார். அவருக்கு வயது 52. இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தார்.

 

அங்கிருந்து வரும்போது வடபழனியில் உள்ள நூறடி சாலையில் உள்ள பாலத்தின் கீழே அவர் அந்த பாலத்தை கடந்து வந்தார். அப்போது அங்கு ஒரு மாநகர பேருந்து செல்கிறது அந்த பேருந்து வதற்காக அவர் முயற்சி செய்கிறார். அங்கே ஒரு சிவன் கோவில் உள்ளது மிகவும் குறுகலான சாலையில் அவர் முயற்சிக்கும் போது அவருடைய இரு சக்கர வாகனம் பேருந்து மோதி பேருந்தின் பின் சக்கரத்தில் அடிபட்டு பேருந்து பின் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கி விடுகிறது.

இதில் சம்பவ இடத்திலேயே மகேந்திரன் உயிர் இழந்து விடுகிறார். பேருந்தை மொத்த முயற்சி செய்த மகேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பேருந்து ஓட்டுனர் கருப்பையா மற்றும் நடத்துனர் ஆகியோர் மீது பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் இன்று மதியம் நடைபெற்றுள்ளது. இதனால் அந்த பகுதியில் இந்த உயிரிழப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply