--- --:--:-- --

108 ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே கர்ப்பிணிப் பெண்ணுக்கு சுகப்பிரசவம்

4

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே 108 ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே கர்ப்பிணிப் பெண்ணுக்கு சுகப் பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. செய்யாறு அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவரது மனைவி மஞ்சுளா நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் பிரசவ வலி ஏற்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

பின்னர் வலி அதிகரித்ததால் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு 108 வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அப்போது செல்லும் வழியிலேயே மஞ்சுளாவிற்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.

 

இதனையடுத்து 108 வாகன மருத்துவ உதவி ஊழியர் நாகராஜ் மற்றும் ஓட்டுநர் சத்யானந்தன் தாய் செய்து முதலுதவி சிகிச்சைகள் அளித்த பின்னர் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon