--- --:--:-- --

பிறந்த குழந்தையையும்,மனைவியையும் பார்த்துவிட்டு சென்ற லாரி ஓட்டுநர் மர்ம மரணம்

14

மேலூர் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த லாரி ஓட்டுனர் ஒருவரின் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே முகமது என்பவர் ஆந்திராவில் லாரி ஓட்டுனராக வேலை செய்துவந்தார். மேலூர் அரசு மருத்துவமனையில் தனக்கு பிறந்த பெண் குழந்தையையும் மனைவியும் பார்த்துவிட்டு நேற்று நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பினார்.

இந்த நிலையில் இன்று காலை கீழையூர் எனுமிடத்தில் உடலெங்கும் காயங்களுடன் முகமது மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவலறிந்து வந்த போலீசார் முகமதுவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகு முகமது கொலை செய்யப்பட்டாரா அல்லது விபத்தில் மரணமடைந்தார் என்பது தெரியவரும் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

 

எனினும் முகமது கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon