கோவையில் சுற்றுலா அழைத்துச் செல்வதாக கூறி பணம் வசூலித்து மோசடி

கோவையில் சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் மற்றும் அவரது மனைவி வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவையில் செயல்பட்டு வந்த தன் வர்ஷா டிராவல்ஸ் நிறுவனம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு குறைந்த கட்டணத்தில் சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி பலரிடம் பணம் வசூலித்ததாக தெரிகிறது.

 

சுமார் 10 கோடி ரூபாய் வசூலைத் டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சுரேஷ்குமார் மற்றும் அவரது மனைவி மகேஸ்வரி ஆகியோர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே சுரேஷ்குமார் மகேஸ்வரியும் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply