மதுரை அவனியாபுரம் பகுதியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது
மதுரை அவனியாபுரம் பகுதியில் கஞ்சா விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டத்தின் பல இடங்களில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலையடுத்து காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவனியாபுரத்தில் கஞ்சா விற்று கொண்டிருந்த இளைஞர்கள் இருவரை போலீசார் மடக்கினர்.

அவர்களிடம் இருந்து இரண்டரை கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல் வேறொரு காவல் துறைக்கு உட்பட்ட பகுதிகளிலும் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதால் போலீசாரும் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




