--- --:--:-- --

திருப்பூர்: நீரில் மூழ்கி மாணவன் பலி

6

திருப்பூர், கணக்கம்பாளையம், காந்திநகர் பகுதியில் வசித்து வருபவர் மவுதீஸ்வரன்(17). கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

 

தற்போது பள்ளி விடுமுறை என்பதால், நேற்று பொடாரம்பாளையம் அருகே உள்ள கரைக்குட்டையில் நண்பர்களுடன் குளிக்க சென்றார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற மவுதீஸ்வரன், நீரில் மூழ்கி பலியானார். இது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Right Menu Icon