--- --:--:-- --

மீண்டும் வரலாறு காணாத உச்சத்தை தொட்டது தங்கம் விலை..!

3

நாளுக்கு நாள் உயரும் தங்கம் விலையால், சாமானிய மக்கள் நகையை வாங்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.ரஷ்யா – உக்ரேன் போர், இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் உள்ளிட்ட காரணங்களால், உலகப் பொருளாதார சூழலில் நிச்சயமற்ற தன்மை இருந்தது. இதனால் உலக நாடுகள் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கியது.

 

இதனால் கடந்த ஆண்டு தங்கம் விலை அதிகரித்தது.இதையடுத்து அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு, அவர் அனைத்து நாடுகளுக்கும் பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்தினார். இதனால் அனைத்து நாடுகளிலும் பங்குச்சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டது.

 

இந்த திடீர் சரிவால் மீண்டும் தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியது. இதன் காரணமாக மீண்டும் தங்கம் விலை உயர்ந்து, வரலாறு காணாத உச்சம் தொட்டது.தமிழ் புத்தாண்டு பிறந்த நிலையில், கடந்த 2 நாட்களாக தங்கம் விலை குறைந்தது என நகை பிரியர்கள் சற்று ஆறுதல் அடைந்து வந்த நிலையில், இன்று அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

 

நேற்று (15.04.2025) தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.8,720-க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து, ஒரு சவரன் ரூ. 69,760-க்கும் விற்பனை செய்யப்பட்டது.இந்த நிலையில் இன்று (16.04.2025) கிராமுக்கு ரூ.95 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.8,810-க்கும், சவரனுக்கு ரூ.760 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 70,520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

இதே போன்று 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.7,260-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.280 உயர்ந்து, ரூ.58080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon