அ.ம.மு.கவைச் சேர்ந்த 60 பேர் மீது கோவை பீளமேடு போலீசார் வழக்கு பதிவு !!!
பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தியதாக அ.ம.மு.கவைச் சேர்ந்த 60 பேர் மீது கோவை பீளமேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஞாயிறன்று அ.ம.மு.க வின் கோவை மாவட்ட நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் கோவை சோமனூர் அடுத்த கணியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டார். கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன் காளப்பட்டி சாலையிலுள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சேலஞ்சர் துரையின் வீட்டிற்கு வருகை தந்தார்.

இந்நிலையில் டிடிவி தினகரனை காண ஏராளமான தொண்டர்கள் அங்கு குவிந்தனர். இதனால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைதொடர்ந்து அ.ம.மு.க – வைச் சேர்ந்த 60 பேர் மீது இரு பிரிவுகளின் கீழ் பீளமேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




