நடுவானில் பறந்த விமானத்தின் என்ஜின் மேற்கூரை கழன்றது

அமெரிக்காவில் விமானம் ஒன்றின் என்ஜினின் மேற்கூரைகள் என்றதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. கொலராடோ மாகாணத்தில் உள்ள டென்வர் நகரில் இருந்து ஃப்ளோரிடாவின் ஆர்லாண்டோ நகருக்கு விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. பாதி வழியில் சென்ற போது விமானத்தின் வலதுபுற என்ஜினின் மேற்கூரைகள் கழன்று ஆட்டம் கண்டது.

 

இதனை கண்ட பயணி ஒருவர் பணிப்பெண் மூலம் விமானிக்கு தகவல் தெரிவித்தார் .இதையடுத்து அந்த விமானம் மீண்டும் டென்வர் நகருக்கு திருப்பி அனுப்பப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது. மேலும் சிறிது நேரம் பறந்திருந்தால் காற்றின் வேகத்தில் என்ஜின் தீப்பற்றி இருக்கும் என விமான பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.


Leave a Reply