மகாத்மா காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பட்டுக்கோட்டை காந்தி பூங்காவில் உள்ள காந்தியின் சிலைக்கு, நகர தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சி நகர தலைவர் ஏ.கே.குமார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. வட்டாரத்தலைவர் வைத்திலிங்கம், நகர இளைஞர் அணி தலைவர் அரசகுமார், VNS பேரவை தலைவர் மோகன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் P.K.நாடிமுத்து,செ.கண்ணன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.முடிவில் அன்சர் நன்றி கூறினார்.