நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக வதந்தி பரப்பப்பட்டுள்ளது என உறுதி செய்யப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என்று நேற்று இரவு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்மநபர் ஒருவர் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்துள்ளார்.
மேஷ் மற்றும் எழும்பூர் ரயில்வே டிஎஸ்பி சக்திவேல் ஆகியோர் தலைமையில் போலீசார் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர். ரயில் நிலையம் இரும்பு பாதை ஆகியவற்றில் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது.
அப்பொழுது வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி என உறுதி செய்யப்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான தொலைபேசி அழைப்புகள் எங்கிருந்து வந்தது, மிரட்டல் விடுத்தவர் யார் என்பது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





