பொங்கல் விடுமுறை: இன்று முன்பதிவில்லா சிறப்பு ரயில்
பொங்கலை கொண்டாட சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்வதால் கூட்ட நெரிசலை தவிர்க்க, சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அந்த வரிசையில், முன்பதிவில்லா சிறப்பு விரைவு ரயிலை சென்னையில் இருந்து மதுரைக்கு இன்று தெற்கு ரயில்வே இயக்குகிறது.
எழும்பூரில் இருந்து இன்று மதியம் 2.15 மணிக்கு ரயில் புறப்படும். வழியில் தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும். மதுரைக்கு இரவு 12.30க்கு சென்றடையும்.





