--- --:--:-- --

பண்டிகை நாளில் நடிகை திரிஷா வீட்டில் நடந்த சோகம்..!

8

டிகை திரிஷாவிற்கு சினிமா உலகில் அறிமுகம் என்பது தேவையில்லை. கடந்த இரண்டு தசாப்தங்களாக அவர் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். கோலிவுட் சினிமாவில் திரிஷாவிற்கு தனி ரசிகர்கள் பட்டாளம் இன்றளவும் உள்ளனர். விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்கள் உடன் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

 

தமிழ் சினிமாவில் நாயகியாக நீண்ட ஆண்டுகளாக நடித்து வரும் திரிஷா இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. தற்போது அஜித், கமல்ஹாசன், மோகன்லால், ராம், சிரஞ்சீவி ஆகியோரின் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். தொடர் படங்களில் பிசியாக இருந்த த்ரிஷா வீட்டில் சோகம் நடந்துள்ளது.

 

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாயகி த்ரிஷாவின் வீட்டில் இன்று எதிர்பாராத அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. எனது மகன் இறந்துவிட்டதாக நடிகை திரிஷா பதிவிட்ட ட்வீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது நாய்க்குட்டி காலமானதாக நடிகை திரிஷா வேதனையுடன் அறிவித்துள்ளார்.

 

வளர்ப்பு நாய்கள் மீது அதிக அன்பு கொண்டவர் திரிஷா. இவர் சோரோ என்ற நாய்க்குட்டியை வளர்த்து வந்தார். அந்த நாய்க்குட்டி கிறிஸ்துமஸ் தினத்தில் உயிரிழந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். தனது மகன் இறந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ள திரிஷா, தன்னை அறிந்த அனைவருக்கும் தனது வாழ்க்கை இனி பொருளற்றதாகிவிட்டது என்பது தெரியும் என மிகுந்த வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

 

தானும், குடும்பத்தினரும் அதிர்ச்சியிலும், மனமுடைந்தும் இருப்பதாக குறிப்பிட்டுள்ள திரிஷா, சமூக வலைதளங்களில் இருந்து சில நாட்கள் விலகி இருப்பதாக தெரிவித்துள்ளார். திரிஷாவின் இந்த பதிவை தொடர்ந்து சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

Right Menu Icon