பெருமாள் கோயிலில் வைகோ சாமி தரிசனம்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தனது மகன் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் சென்று, பெருமாள் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அப்போது பூசாரியின் தட்டில் காணிக்கை செலுத்திய அவர், பெருமாளுக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தையும் வாங்கி பயபக்தியுடன் அருந்தினார்.
அவரிடம், கடவுளுக்கு அபிஷேகம் செய்த பூஜை பொருள்கள் வழங்கப்பட்டன. இது தொடர்பான வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




