டங்ஸ்டன் சுரங்கத்திற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை – அமைச்சர் துரைமுருகன்
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் இரவு பேசிக்கொண்டிருந்தபோது, அந்தப் பகுதிக்கு வந்த இருவர் ஆண் நண்பரை தாக்கி விரட்டிவிட்டு, அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரை எடுத்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் எனும் நபரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் (37) என்பவர் மீது கோட்டூர்புரம், மயிலாப்பூர், வேளச்சேரி, மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளில் 15க்கும் மேற்பட்ட திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.





