--- --:--:-- --

சுங்க சாவடி போராட்டம் வாபஸ்..!

8

சிதம்பரம் அருகே சுங்கச்சாவடி கட்டணம் தொடர்பான பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் தனியார் பேருந்து உரிமையாளர்களின் முற்றுகை போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கிராமத்தில் புதிய சுங்கச்சாவடி இன்று திறக்கப்பட்டது.

 

விழுப்புரம் நாகப்பட்டினம் பைபாஸ் சாலை பணிகள் நிறைவு பெறாத நிலையில் இந்த சுங்கச்சாவடியை திறக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் சுங்க சாவடியை அதிக கட்டணம் பரிசீலிப்பதாக கோரி கடலூர் தனியார் பேருந்து உரிமையாளர்கள் முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர்.

 

சுங்க கட்டணத்தை குறைக்க வலியுத்தி பேருந்து உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து சார் ஆட்சியர் அலுவலகத்தில் துணை ஆற்றிய ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

 

இந்த பேச்சு வார்த்தைகள் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. தனியார் பேருந்துகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் கட்டணம் வசூலிக்கப்படாது என்று சுங்கச்சாவடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

Right Menu Icon