குழந்தை பிறப்பு அதிகரிக்க புதிய திட்டம்..4 நாட்கள் மட்டும் வேலை..!
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை திட்டம் அமல்படுத்தப்படுகிறது. ஜாவா ஜப்பானில் கடந்தாண்டு வரலாறு காணாத அளவு குழந்தை பிறப்பு விகிதம் சரிவடைந்துள்ளது.
ஜப்பானில் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்யும் நடைமுறையை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள அரசு அலுவலகங்களில் கொண்டுவரப்பட உள்ளதாக டோக்கியோ ஆளுநர் யூரிகோ அறிவித்துள்ளார்.
மேலும் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் இதனால் ஊழியர்கள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவார்கள் என்றும் ஆளுநர் யூரிகோ தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





