--- --:--:-- --

தம்பதி சென்ற காரில் திடீரென வந்த புகை..!

8

மேட்டுப்பாளையம் அருகே நடுரோட்டில் கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. காரில் வந்த விவசாயம் அவரது மனைவியும் நல் வாய்ப்பாக உயிர்த்தப்பினர்.

 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள செட்டிபாளையம் விவசாயி நாகராஜ் இவரும் மனைவி முத்துலட்சுமியும் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை காரில் ஏற்றிக்கொண்டு விற்பனை செய்வதற்காக மேட்டுப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

 

அப்பொழுது காரின் பின்பகுதியில் திடீரென காரும் புகை வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கணவன், மனைவி இருவரும் உடனடியாக காரில் இருந்து கீழே இறங்கினர். இது குறித்து மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon