--- --:--:-- --

சாலையில் நடந்து சென்ற பெண்ணை கொம்பால் முட்டி தூக்கிய மாடு..!

5

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள நிலக்கோட்டை பகுதியில் சாலை நின்றிருந்த பசுமாடு ஒன்று நடந்து சென்ற செவிலியரை முட்டி தூக்க முயன்ற காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. நிலக்கோட்டை பகுதியில் கேரள மாநிலம் செல்லக்கூடிய பிரதான சாலையில் அமைந்துள்ளது.

 

இந்த பகுதி நிலக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொது மக்கள் தங்களது பணி சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய பொதுமக்கள் அதிகம் கூட கூடிய இடமாக உள்ளது. இந்த நிலையில் சமீப காலமாக அந்த பகுதியில் வளர்ப்பு பிராணிகள் சாலையில் சுற்றி திரிவதால் அடிக்கடி வாகன விபத்து மற்றும் போக்குவரத்து இடையூறு தொடர்வதோடு பொதுமக்களை தாக்கும் நிகழும் சூழல் நடந்துள்ளது. சாலையில் நடந்த சென்ற பொழுது சாலையில் நின்று கொண்டிருந்த வளர்ப்பு பசு மாடு திடீரென செல்வியை தாக்கியுள்ளது. இதில் செல்வி தூக்கி வீசப்பட்டு சிறு சிறு காயம் அடைந்த நிலையில் தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon