--- --:--:-- --

மகளை கடித்த பாம்பு..தந்தை செய்த செயல்..!

6

திருத்தணியில் மகளை கடித்த பாம்பை அடித்துக் கொன்று பையில் போட்டு மருத்துவமனைக்கு வந்த பெற்றோரால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கே.ஜி.கண்டிகை ஊராட்சியை சேர்ந்தவர் சகாயராஜ்.

 

இவரது மகள் இளவரசி சாலையில் நடந்து சென்ற பொழுது தீடீரென பாம்பு கடித்தது. இதனை அறிந்த சகாயராஜ் தனது மகளை கடித்த பாம்பை அடித்துக்கொன்று அதனை ஒரு பையில் போட்டு மருத்துவமனைக்கு கொண்டு வந்தார்.

 

இதனால் திருத்தணி அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் சிறுமியை கடித்தது விஷம் இல்லாத பாம்பு என்பது தெரிய வந்தது. பின்னர் 24 மணி நேர கண்காணிப்புக்கு பிறகு சிறுமி வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon