தென்கொரியாவை நூதன முறையில் சீண்டும் வடகொரியா..!

தென்கொரியாவிற்குள் பலூன்கள் மூலம் கழிவுகள் மற்றும் குப்பைகளை அனுப்பி வந்த வடகொரியா, தற்பொழுது மேலும் ஒரு படி மேலாக சென்று நூதன முறையில் பழி வாங்கியுள்ளது.

 

சியோ நகருக்கு பலூன் மூலம் குப்பைகளை அனுப்பிய வடகொரியா அதனின் தென்கொரிய அரசு எதிரான வாசகங்கள் கொண்ட துண்டு பிரசுரங்களை வீசியுள்ளது. சியோ நகரின் பல தெருக்களில் பரவி கிடந்த பிரசுரங்களில் தென்கொரிய அதிபர் மற்றும் அவரது மனைவியின் புகைப்படங்களும் அவர்களுக்கு எதிரான கருத்துகளும் இடம் பெற்றிருந்தன.

 

தென்கொரியா அதிபர் மாளிகைக்குள் வடகொரியா அனுப்பிய துண்டு பிரசுரங்கள் பறந்து வந்த காட்சிகள் வெளியாகியுள்ளன.