--- --:--:-- --

வயநாடு தேர்தலில் போட்டியிடுகிறார் குஷ்பூ..!

6

வயநாடு தேர்தலில் பாஜக சார்பில் குஷ்பூ போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தலில் ரேபரேலி, வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வெற்றி பெற்றார்.

 

வயநாடு தொகுதியில் அவர் ராஜினாமா செய்ததையடுத்து அந்த தொகுதிக்கான இடை தேர்தலை காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி களமிறக்கப்பட்டுள்ளார். அவர் எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

 

இந்நிலையில் வயநாடு தொகுதியில் பாஜக வேட்பாளராக குஷ்பு போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் வயநாட்டில் போட்டியிடுவது குறித்து தனக்கு தெரியாது என்றும் இது தொடர்பாக தேசிய தலைமையோ மாநில தலைமையோ இதுவரை அணுகவில்லை என்றும் குஷ்பூ தெரிவித்துள்ளார். வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நவம்பர் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon