சிறைவாசலில் போலீசாரை தள்ளிவிட்டு தப்பி ஓடிய கைதி..!
பெரம்பலூரில் சிறை வாசலில் தப்பி ஓடிய கைதியை போலீசார் துரத்திச் சென்று பிடித்து சிறையில் அடைத்தனர். பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சம்பத்குமார் என்பவர் மீதான வழக்கு நிலவையில் உள்ள நிலையில் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார்.
பிடிவாரண்ட் அடிப்படையில் சம்பத்குமாரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்காக அழைத்துச் சென்றனர். சிறைவாசலில் காரில் இருந்து இறங்கியதும் இரண்டு போலீசாரையும் தள்ளிவிட்டு சம்பத்குமார் தப்பியோடி உள்ளார்.
போலீசாரை பிடிக்க முயன்ற பொழுது சம்பத்குமார் அணிந்திருந்த லுங்கி கழற்றிவிட்டு அரைக்கால் டவுசருடன் தப்பித்து ஓடியுள்ளார். போலீசார் அவரை துரத்துச் சென்று ஆலம்பாடி சாலை பகுதியில் உள்ள வயக்காட்டிற்குள் பிடித்தனர்.
பின்னர் பிடிபட்ட சம்பத்குமாரை போலீசார் பாதுகாப்பாக அழைத்து வந்து பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





