--- --:--:-- --

சிக்கலில் சிக்கிய தமன்னா..அமலாக்கத் துறையினர் விசாரணை..!

5

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் சிக்கிய செல்போன் செயலியின் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்றது தொடர்பாக நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.

 

பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சிகளை முதலீடு செய்து வருமானம் ஈட்டலாம் என முதலீடாளர்களிடம் பண மோசடி செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

 

இது தொடர்பான நிறுவனம் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. விளம்பர நிகழ்ச்சியில் நடிகை தமன்னா பங்கேற்று பணம் பெற்றதாக கூறப்பட்டது. அமலாக்கத்துறை இயக்குனரகம் அவருக்கு சம்மன் அனுப்பி இருந்தது. இதையடுத்து பெற்றோருடன் சென்ற தமன்னா அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.

 

நேற்று பிற்பகலில் ஆஜரான தமன்னாவிடம் ஐந்து மணி நேரத்திற்கு மேலாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். தமன்னாவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை என்றும் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon