காலனி, கையுறை இல்லாமல் கால்வாயை சுத்தம் செய்த அவலம்..!
வேலூரில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தூய்மை பணியாளர்கள் கால்வாயை சுத்தம் செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டு குடியாத்தம் காட்பாடியில் கால்வாய்களை தூர்வாரி சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனை இந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு அருகில் இணை மேலாண் இயக்குனர் விஜய கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியர் சுபலட்சுமி மாநகராட்சி ஆணையர் ஜானகி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த நிலையில் கால்வாயில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி தூய்மை பணியாளர்கள் கால்வாய் சுத்தம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





