தமிழ்நாட்டை தொடர்ந்து கேரளாவிற்கு பறந்த எச்சரிக்கை..!
கேரள மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கேரள கடலோர பகுதிகளில் கடல் அலையில் சீற்றம் அதிகரித்து காணப்படும் என்று தகவல் சேவைக்கான இந்திய தேசிய மையம் எச்சரித்துள்ளது.
கடல் சீற்றத்தால் பாதிக்கப்படும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் கடலோர பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லுமாறும் கேரளா அரசு அறிவுறுத்தியுள்ளது.
மீனவர்கள் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் யாவும் மறு அறிவிப்பு வரும் வரை கடற்கரை பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





