--- --:--:-- --

பிரபல பேக்கரியில் கெட்டுப்போன பிரெட் விற்பனை..!

2

பாளையங்கோட்டையில் பிரபல பேக்கரியில் கெட்டுப்போன பிரெட் விற்பனை செய்ததாக வாடிக்கையாளர் உறவினர்களுடன் திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் செயல்பட்டு வரும் ராஜேஷ் என்பவர் வீட்டிற்கு பிரட் வாங்கி சென்றுள்ளார்.

 

வீட்டிற்கு சென்ற பிரட் பாக்கெட்டை திறந்த பொழுது அதில் பூஞ்சைகள் பிடித்து கெட்டுப் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பேக்கரியிடம் சென்று முறையிட்ட பொழுது அவர்கள் அலட்சியமாக பதில் அளித்துள்ளனர்.

 

இதையடுத்து பேக்கரியில் திரண்ட ராஜேஷின் உறவினர்கள் பேக்கரி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் இரு தரப்பினரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon