--- --:--:-- --

மீனவர்கள் குடும்பத்திற்கு நேரில் சென்று நம்பிக்கை தெரிவித்த கனிமொழி எம்.பி..!

3

லங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக எம்பி கனிமொழி நம்பிக்கை தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை சிறை பிடித்து இருக்கிறது.

 

இந்த சூழலில் அந்த மீனவர்கள் குடும்பத்தினர் திமுக எம்பி கனிமொழியை நேரில் சென்று சந்தித்தார். அப்பொழுது இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்டுக் கொண்டு வர தமிழக அரசு மத்திய வெளியுறவு துறைக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிவித்தார்.

 

விரைவில் மீனவர்கள் தாயகம் திரும்புவார்கள் என்றும் மீனவ குடும்பத்தினர் அளித்த கோரிக்கை மனுக்களையும் அவர் பெற்றுக்கொண்டார். அப்பொழுது சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா வீட்டார் உடன் இருந்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon