--- --:--:-- --

நம்புதாளையில் கோவில் திருவிழாவை முன்னிட்டு 4ம் ஆண்டு வடமாடு எருது கட்டு போட்டி..!

3

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி அருகே நம்புதாலை கண்மாய்க்கரை குடியிருப்பு பகுதியில் அமைந்திருக்கும் ஸ்ரீ காலசித்தி விநாயகர், ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயம் உள்ளது.

 

இந்த ஆலயத்தின் 19 ஆம் ஆண்டு ஆடி உற்சவ விழாவை முன்னிட்டு கடந்த 23ஆம் தேதி செவ்வாய்க்கிழமை விழா நடைபெற்றது. அதில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் பால்குடம் காவடி எடுத்து அம்மனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

 

அதனை தொடர்ந்து இன்று நான்காம் ஆண்டு வடமாடு எருது கட்டு போட்டி நடைபெற்றது. இந்த எருது கட்டு போட்டியில் ஒரு காளைக்கு 9 இளைஞர்கள் என போட்டி ஆரம்பிக்கப்பட்டு 15 நிமிடங்கள் வழங்கப்பட்டது.

 

இந்த 15 நிமிடங்களுக்குள் வெற்றி பெற்ற இளைஞர்களுக்கும் காளைகளுக்கும் பணம், கோப்பை, பாத்திரங்கள் பரிசாக வழங்கப்பட்டது. இதனை காண சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான கிராம மக்கள் பார்வையிட்டனர் தொண்டி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon