கல்குவாரி குட்டையில் மூழ்கி 10ம் வகுப்பு மாணவன் பலி..!
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி அடுத்த தீர்த்தகிரி மலையில் உள்ள கல்குவாரியில் நண்பர்களுடன் குளிக்க சென்ற பத்தாம் வகுப்பு மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
அபினேஷ் என்ற அந்த மாணவர் டியூஷன் முடிந்து வீடு திரும்பிய பொழுது சக நண்பர்களுடன் குளிக்க சென்று நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிறுவர்களின் சடலங்களை நீண்ட நேரம் தேடுதலுக்கு பிறகு தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள கல்குவாரிகளில் உயிரிழப்புகள் அதிகம் நிகழ்வதாக கூறும் சமூக ஆர்வலர்கள் குவாரி குட்டைகளை சுற்றி வேலிகள் அமைப்பது எச்சரிக்கை பலகைகள் வைப்பது போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





