தண்டவாளத்தில் சிக்கிய பெண்..துரிதமாக செயல்பட்ட ரயில்வே போலீசார்..!
அயோத்தியில் ரயில் நிலையத்தில் ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கிய பெண்ணை துரிதமாக செயல்பட்டு மீட்டர் ரயில்வே போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
ஆந்திராவைச் சேர்ந்த பத்மாவதி தனது கணவருடன் வந்து ராமர் கோயில் தரிசனம் செய்துவிட்டு பின் காசிக்கு செல்வதற்காக ரயில் நிலையம் வந்தார். அப்பொழுது நகரும் ரயிலில் இருந்து கீழே இறங்க முற்பட்ட பொழுது பத்மாவதி நிலை தடுமாறி ரயில் சக்கரத்துக்கும் தண்டவாளத்திற்கும் இடையில் தவறி விழுந்தார்.
துரிதமாக செயல்பட்டு ரயிலை நிறுத்தி ரயிலுக்கு அடியில் இருந்த பெண்ணை பத்திரமாக மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்த வீடியோவை அதிகாரபூர்வ இணையத்தில் வெளியிட்ட மீட்புப் பணியில் ஈடுபட்ட போலீசருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர் .
📱 Share on WhatsApp 𝕏 Share on X





