--- --:--:-- --

கலப்பட டீத்தூள் தயாரித்த குடோனுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!

3

வேலூரில் கலப்பட டீ தூள் தயாரித்து விற்பனை செய்தவர் கம்பெனிக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். வேலூரில் செயல்பட்டு வரும் ஹோட்டல்கள் மற்றும் டீக்கடைகளில் கலப்பட டீத்தூள் பயன்படுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு வந்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு செய்தனர்.

 

ஜீவன் அவரது வீட்டில் குடோன் அமைத்து டீத்தூளில் கலப்படம் செய்து பல்வேறு இடங்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் முடிவுகள் வந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon