--- --:--:-- --

தந்தை தானமாக கொடுத்த இடம்.. இடத்தை திரும்ப கேட்டு தாக்குதல் நடத்திய மகன்..!

5

தர்மபுரியில் தானமாக கூட்டுறவு சங்கத்திற்கு கொடுத்த நிலையத்தை திரும்ப கேட்டு சங்கத்தின் ஊழியரை தாக்கிய நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தர்மபுரி மாவட்டம் ஆலயத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க இடமானது அந்த பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவர் சங்கத்திற்கு 1998 ஆம் ஆண்டு தானமாக வழங்கியுள்ளார்.

 

இந்த நிலையில் நேற்று தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு சென்ற மணி சங்கத்தை காலி செய்யவில்லை எனக் கூறியபடி அலுவலக ஊழியர் அருண் என்பவரை திருப்பிழியால் தாக்கியுள்ளார். உடனடியாக அருண் தள்ளிவிட்டு வெளியே ஓடியுள்ளார்.

 

அப்பொழுது அருகில் இருந்தவர்கள் தடுக்க முயன்ற பொழுது அவர்களையும் தாக்கியுள்ளான். இதனால் அலுவலக ஒளி உட்பட நான்கு பேருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon